/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விநாயகர் சிலைகளுக்கு விலை நிர்ணயம் செய்ய மனு விநாயகர் சிலைகளுக்கு விலை நிர்ணயம் செய்ய மனு
விநாயகர் சிலைகளுக்கு விலை நிர்ணயம் செய்ய மனு
விநாயகர் சிலைகளுக்கு விலை நிர்ணயம் செய்ய மனு
விநாயகர் சிலைகளுக்கு விலை நிர்ணயம் செய்ய மனு
ADDED : ஜூலை 30, 2024 05:45 AM
கடலுார்: விநாயகர் சிலைகளுக்கு விலை நிர்ணயம் செய்யக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமையில் விநாயகர் சிலையுடன் வந்து கொடுத்துள்ள மனு:
அண்ணாகிராமம் ஒன்றியம் நல்லுார்பாளையம், கடலுார் மாநகராட்சி பகுதியில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் குடிசை தொழிலாக செய்து வருகின்றனர். சிலை தயாரிப்பாளர்கள் விலையை தங்கள் இஷ்டத்திற்கு நிர்ணயம் செய்கிறார்.
மூன்று அடி முதல் 10 அடி வரை தயாரிக்கும் சிலைகள் ஒவ்வொரு இடத்திற்கும் விலை வித்தியாசம் உள்ளது. இதனால், சாமானியர்கள் விநாயகர் சிலை வாங்கி வழிபாடு நடத்த முடியாத நிலை உள்ளது. சிலைகள் அரசு விதிகளுக்குட்பட்டு பிளாஸ்டர் பாரிஸ் பயன்படுத்தாமல் செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் சிலை உற்பத்தியாளர்களை அழைத்து பேசி, விலை பட்டியல் தயாரித்து அதன்படி விற்பனை செய்ய அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.