/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'மக்களுடன் முதல்வர் திட்டம்' புதுச்சத்திரத்தில் சிறப்பு முகாம் 'மக்களுடன் முதல்வர் திட்டம்' புதுச்சத்திரத்தில் சிறப்பு முகாம்
'மக்களுடன் முதல்வர் திட்டம்' புதுச்சத்திரத்தில் சிறப்பு முகாம்
'மக்களுடன் முதல்வர் திட்டம்' புதுச்சத்திரத்தில் சிறப்பு முகாம்
'மக்களுடன் முதல்வர் திட்டம்' புதுச்சத்திரத்தில் சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 17, 2024 12:30 AM

புதுச்சத்திரம் : புதுச்சத்திரத்தில், தமிழக அரசின் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடந்தது.
புவனகிரி தாசில்தார் தனபதி தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ் முன்னிலை வகித்தார்.
சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மி ராணி பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
முகாமில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம், ஆதிதிராவிட நலத்துறை, மின் வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்பு, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.
சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமிழ்ச்செல்வி, வட்ட வழங்கல் அலுவலர் அம்பேத்கர்ராஜ், வேளாண் உதவி இயக்குனர் நந்தினி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் மகேஸ்வரி, சரண்யா, சமூக நலத்துறை பிரவீனா, ஊராட்சி தலைவர்கள் அமுதா ராஜேந்திரன், சுதர்சன், அர்ஜூனன், வி.ஏ.ஓ,. க்கள் அலெக்சாண்டர், சிவராமன், ஆனந்தபாபு, முகில்வண்ணன் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.