/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நடுவீரப்பட்டு மருத்துவமனையில் இடவசதியின்றி மக்கள் தவிப்பு நடுவீரப்பட்டு மருத்துவமனையில் இடவசதியின்றி மக்கள் தவிப்பு
நடுவீரப்பட்டு மருத்துவமனையில் இடவசதியின்றி மக்கள் தவிப்பு
நடுவீரப்பட்டு மருத்துவமனையில் இடவசதியின்றி மக்கள் தவிப்பு
நடுவீரப்பட்டு மருத்துவமனையில் இடவசதியின்றி மக்கள் தவிப்பு
ADDED : ஜூன் 10, 2024 01:15 AM
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை திறக்கப்படாமல், குறுகிய இடத்தில் சிகிச்சை அளிக்கப்படுவதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டடம் பழுதடைந்ததால் தற்போது பிரசவம் பார்க்கும் கட்டடத்தில் மருத்துவமனை தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தில் சித்த மருத்துவ பிரிவு, ரத்த பரிசோதனை, பொது மருத்துவம், பிரசவம் பார்க்கும் பிரிவு உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகிறது. இதனால் மருத்துவமனையில் இடவசதி இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் கடந்த டிசம்பர் மாதம் ரூ.22 லட்சம் மதிப்பில் சித்த மருத்துவ பிரிவிற்கு புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கியது. இக்கட்டடம் பணி முடிந்து திறக்க இருந்த நேரத்தில், தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததால் திறக்கப்படவில்லை.
தற்போது தேர்தல் நன்னடத்தை விலக்கிக்கொள்ளப்பட்டதால், கட்டி முடிக்கப்பட்ட சித்த மருத்துவபிரிவு கட்டடத்தை உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.