Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தொடர் வழிப்பறியால் சிதம்பரத்தில் மக்கள் அச்சம்

தொடர் வழிப்பறியால் சிதம்பரத்தில் மக்கள் அச்சம்

தொடர் வழிப்பறியால் சிதம்பரத்தில் மக்கள் அச்சம்

தொடர் வழிப்பறியால் சிதம்பரத்தில் மக்கள் அச்சம்

ADDED : ஜூலை 10, 2024 05:20 AM


Google News
Latest Tamil News
சிதம்பரம் : சிதம்பரத்தில் நடைபெற்று வரும் தொடர் வழிப்பறி சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளார்.

சிதம்பரம், பள்ளிப்படை இந்திரா நகரை சேர்ந்தவர் வாசுதேவன் மனைவி சவுந்தர்யா,26; இவர் நேற்று மாலை 6:00 மணிக்கு தனது மகனை டியூஷனில் விடுவதற்காக அருகில் உள்ள இப்ராஹிம் நகருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்பொது, எதிரில் பைக்கில் வந்த மர்ம நபர், சவுந்தர்யாவின் கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சிதம்பரத்தில் கடந்த 15 நாட்களில் 3 வழிப்பறி நடந்துள்ளது. கடந்த 28 ம் தேதி, கடவாச்சேரியில், அரசு பள்ளி ஆசிரியரிடம் 9 சவரன் தாலி செயின் பறிப்பு சம்பவம் பட்டப்பகலில் நடந்தது. கடந்த 4ம் தேதி புகழேந்தி என்பவர், பைக்கில் கொண்டு சென்ற ரூ.2.30 லட்சம் திருடு போனது. அடுத்த 5 நாட்களுக்குள் நேற்று தாலி பறிப்பு சம்பவம் நடந்துள்ளது மக்களை அச்சமடைய செய்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us