/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு பெண்ணாடத்தில் பயணிகள் அவதி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு பெண்ணாடத்தில் பயணிகள் அவதி
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு பெண்ணாடத்தில் பயணிகள் அவதி
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு பெண்ணாடத்தில் பயணிகள் அவதி
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு பெண்ணாடத்தில் பயணிகள் அவதி
ADDED : ஜூலை 19, 2024 04:48 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து வைத்துள்ள தள்ளு வண்டி பழக்கடைகள், பூக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில் உள்ள பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தை பயன்படுத்தி திருமலை அகரம், கோனுார், வடகரை, நந்திமங்கலம், அரியராவி, பெ.பூவனுார் உட்பட 30க் கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவர்கள் அன்றாட தேவைகளுக்கு விருத்தாசலம், திட்டக்குடி, கடலுார், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
பஸ் நிலைய வளாகத்தில் தள்ளு வண்டியில் பழக்கடைகள், பூக்கடைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் பயணிகள் அமர முடியாத நிலை உள்ளது.
இதனால் பயணிகள் பஸ்சிற்காக திறந்தவெளியில் கால் கடுக்க காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பழைய பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து வைத்துள்ள தள்ளுவண்டி பழக்கடைகள், பூக்கடைகள் மற்றும் இருசக்கர வாகனங்களை அகற்ற போலீசார், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.