/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விபத்துகளை தடுக்க 'சென்டர் மீடியன்' பெண்ணாடம் மக்கள் கோரிக்கை விபத்துகளை தடுக்க 'சென்டர் மீடியன்' பெண்ணாடம் மக்கள் கோரிக்கை
விபத்துகளை தடுக்க 'சென்டர் மீடியன்' பெண்ணாடம் மக்கள் கோரிக்கை
விபத்துகளை தடுக்க 'சென்டர் மீடியன்' பெண்ணாடம் மக்கள் கோரிக்கை
விபத்துகளை தடுக்க 'சென்டர் மீடியன்' பெண்ணாடம் மக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 18, 2024 11:14 PM
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் விபத்துக்களை தடுக்க, சாலையில் சென்டர் மீடியன் அமைக்க, பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் பெண்ணாடம் வழியாக பஸ், லாரி, சிமென்ட் லோடு, கனரக லாரிகள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன. இச்சாலை கருவேப்பிலங்குறிச்சி முதல் ராமநத்தம் வரை 33 அடி அகலம் கொண்டது.
பெண்ணாடத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பேரூராட்சி அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், வங்கிகள், மருத்துவமனைகள், வேளாண் விரிவாக்க மையம் ஆகியவை உள்ளதால் பழைய பஸ் நிலையம், கடைவீதி பகுதி எந்நேரமும் பொது மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும்.
மேலும், பழைய பஸ் நிலையம் முதல் கிழக்கு வாள்பட்டறை வரையிலான கடைகளுக்கு பொருட்கள் இறக்கும் லோடு லாரிகள், கடைகளுக்கு பொருள் வாங்க வருவோர் தங்களின் இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்திச் செல்கின்றனர்.
தள்ளுவண்டிகளையும் வியாபாரிகள் சாலையில் நிறுத்துவதால் சாலை குறுகி அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் விபத்து மற்றும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
எனவே, பெண்ணாடத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை கட்டுப்படுத்த சென்டர் மீடியன் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.