/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நேரடியாக களமிறங்கிய பழனிசாமி அ.தி.மு.க., நிர்வாகிகள் உற்சாகம் நேரடியாக களமிறங்கிய பழனிசாமி அ.தி.மு.க., நிர்வாகிகள் உற்சாகம்
நேரடியாக களமிறங்கிய பழனிசாமி அ.தி.மு.க., நிர்வாகிகள் உற்சாகம்
நேரடியாக களமிறங்கிய பழனிசாமி அ.தி.மு.க., நிர்வாகிகள் உற்சாகம்
நேரடியாக களமிறங்கிய பழனிசாமி அ.தி.மு.க., நிர்வாகிகள் உற்சாகம்
ADDED : மார் 12, 2025 06:52 AM
சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் அதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக தி.மு.க., அ.தி.மு.க., போன்ற கட்சிகள், பூத் கமிட்டி அமைப்பது, உறுப்பினர்கள் சேர்ப்பு என, தீவிரம் காட்டி வருகிறது.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழகம் முழுவதும் 500 பேர் கொண்ட குழுவை களமிறக்கி, கட்சியினர் சாதக, பாதக நிலையை அலசி ஆராய்ந்தார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த 2 நாட்களுக்கு முன், அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் ஒரே நேரத்தில் காணொளி காட்சி வாயிலாக பழனிசாமி சந்தித்தார்.
அவர்களுக்கு தேர்தல் விவரங்களை வகுத்துக் கொடுத்து, குறை, நிறைகளை கேட்டறிந்தார்.
ஒவ்வொரு தொகுதியின் சாதகம், பாதம் அறிந்து வைத்து, அந்த மாவட்ட செயலாளர்களிடம் கிடுக்கிபிடி கேள்விகளை கேட்டுள்ளார். இது கட்சியினர் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு, பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தொகுதி பொறுப்பாளராக, முன்னாள் அமைச்சர் ஜெயபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர், மாவட்ட செயலாளர் பாண்டியனுடன், ஒவ்வொரு பூத்திற்கும் நேரடியாக சென்று, பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.
கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி நேரடியாக தேர்தல் பணியில் களமிறங்கியதால், சோர்ந்து கிடந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.