/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு தோப்பு உற்சவம் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு தோப்பு உற்சவம்
பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு தோப்பு உற்சவம்
பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு தோப்பு உற்சவம்
பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு தோப்பு உற்சவம்
ADDED : ஜூன் 22, 2024 04:41 AM

கடலுார் : திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், ஆனி மாத பவுர்ணமியையொட்டி, தோப்பு உற்சவம் நடந்தது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப்பெற்ற பாடலீஸ்வரர் கோவில்உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத பவுர்ணமியன்று கடலுார் அடுத்த காராமணிக்குப்பம் குளம் அருகே வன உற்சவம் என்கிற தோப்பு உற்சவம்நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம் துவங்கியதையொட்டி, பாடலீஸ்வரர் கோவிலில் சுவாமி வீதி புறப்பாடு நடக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை கோவில் வளாகத்தில் தோப்பு உற்சவம் நடந்தது. இதை தொடர்ந்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு பால், தயிர், தேன் உள்ளிட்ட 27 விதமான அபிஷேக பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின், மலர் அலங்காரத்தில் பாடலீஸ்வரரும், பெரியநாயகி அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.