ADDED : ஜூன் 10, 2024 01:16 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், இயற்கை வேளாண்மை பற்றிய 5 நாள் பயிற்சி முகாம் துவங்கியது.
முகாமை திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை துவக்கி வைத்து பேசினார். அதைத்தொடர்ந்து, தொழில்நுட்ப விஞ்ஞானிகள் இயற்கை வேளாண்மை, மண்வளம் பேணி காப்பது, இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், மண்வளத்தை மீட்டெடுத்தல், சுற்றுசூழல் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை. மண்ணின் ஆரோக்கியம், மண் மற்றும் நீர் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து பயிற்சி அளித்தனர். இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு மற்றும் அனுபவங்கள், ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் பாரம்பரிய ரகங்கள், அதன் பயன்கள் குறித்து முன்னோடி விவசாயிகள் விளக்கம் அளித்தனர்.
கம்மாபுரம் வட்டாரத்தை சேர்ந்த 30 மகளிர் சமுதாய களப் பயிற்றுனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பயனாளிகள் பயிற்சி பெற்றனர்.