/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகனிடமிருந்து சொத்துக்களை மீட்டுத்தர கலெக்டரிடம் முதியவர் மனு மகனிடமிருந்து சொத்துக்களை மீட்டுத்தர கலெக்டரிடம் முதியவர் மனு
மகனிடமிருந்து சொத்துக்களை மீட்டுத்தர கலெக்டரிடம் முதியவர் மனு
மகனிடமிருந்து சொத்துக்களை மீட்டுத்தர கலெக்டரிடம் முதியவர் மனு
மகனிடமிருந்து சொத்துக்களை மீட்டுத்தர கலெக்டரிடம் முதியவர் மனு
ADDED : ஜூலை 30, 2024 05:47 AM

கடலுார்: மகனுக்கு கொடுத்த நிலத்தை மீட்டுத்தரக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் மனு கொடுத்தார்.
பண்ருட்டி அடுத்த ஒறையூரை சேர்ந்த பெருமாள், 75; என்பவர் கொடுத்துள்ள மனு:
விவசாயியான எனக்கு, 2 மகன்கள் உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் எனது மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் இளைய மகன் என்னை பராமரிப்பதாக கூறி ஏமாற்றி என், பெயரில் இருந்த சொத்துக்களை தானசெட்டில்மெண்ட் பெற்றார். இதையடுத்து, என்னை பராமரிக்காமலும், உணவு மருத்துவம் போன்ற எந்த உதவியும் செய்யாமல் வீட்டை விட்டு வெளியேற்றினார்.
தற்பொழுது காராமணிக்குப்பம் கோவில் ஒன்றில் யாசகம் பெற்று சாப்பிட்டு வருகிறேன். எனவே, என்னிடமிருந்து மகன் பெற்ற சொத்துக்களை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.