ADDED : ஜூன் 24, 2024 05:44 AM
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே காசு வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். கொடுக்கன்பாளையத்தில் உள்ள மோட்டார் கொட்டகையில் காசு வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் சூதாடிய கொடுக்கன்பாளையம் ராசு,34; ராமையன்,47; மாணிக்கம்,55; கருணாமூர்த்தி,26; ஆகியோர் அங்கிருந்து தப்பியோடினர். அவர்கள் நான்கு பேர் மீதும் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர்.