Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிதம்பரத்தில் நந்தனார் சுவாமிகள் வீதியுலா

சிதம்பரத்தில் நந்தனார் சுவாமிகள் வீதியுலா

சிதம்பரத்தில் நந்தனார் சுவாமிகள் வீதியுலா

சிதம்பரத்தில் நந்தனார் சுவாமிகள் வீதியுலா

ADDED : ஜூலை 14, 2024 04:28 AM


Google News
Latest Tamil News
சிதம்பரம், : சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசனத்தையொட்டி, நந்தனார் சுவாமிகள் வீதியுலா நடந்தது.

சிதம்பரம் ஓமக்குளம் நந்தனார் மடத்திலிருந்து, நந்தனார் கல்வி கழகம் சார்பில் ஊர்வலம் புறப்பட்டது. நந்தனார் கல்வி கழக மூத்த ஆலோசகர், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., நீலகங்காதரன், முன்னாள் கல்வி கழக தலைவர் டாக்டர் சங்கரன் துவக்கி வைத்தனர். தெற்கு வீதியில், நந்தனார், நடராஜரை தரிசிக்கும் நிகழ்வு நடந்தது.

அதனை தொடர்ந்து, நான்கு வீதிகள் வழியாக வந்த ஊர்வலம், மீண்டும் நந்தனார் மடத்தை அடைந்தது.

நிகழ்ச்சியில் நந்தனார் கல்வி கழக டிரஸ்ட் செயலாளர் வினோபா தலைமை தாங்கினார். கல்விக் கழக பொருளாளர் இளைய அன்பழகன், செயலாளர் அன்பழகன், துணைத் தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கல்வி கழக மூத்த உறுப்பினர் ரத்தினசாமி, கற்பனைச்செல்வம், மணிவேல், இளையராஜா, மடத்தின் அர்ச்சகர் குழந்தைவேலு, வி.சி., மாவட்ட செயலாளர் தமிழ்ஒளி, சகஜானந்தா சமூக பேரவை தலைவர் நீதிவளவன், ஆதிதிராவிடர் மகாஜன சங்க தலைவர் சுரேஷ்குமார், இன்ஜினியர் கலியமூர்த்தி, வழக்கறிஞர் வைத்திலிங்கம், ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி விமல்குமார், பாலு, ஆதிமூலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us