ADDED : ஜூன் 25, 2024 07:13 AM
கடலுார், : கடலுார் நாயுடு சங்க பொதுக்குழுக் கூட்டம் திருப்பாதிரிப்புலியூர் சங்க கட்டடத்தில் நடந்தது.
கூட்டத்தில் ஆண்டறிக்கை, வரவு-செலவு அறிக்கை வாசிக்கப்பட்டது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இந்தாண்டு மணமக்கள் நேர்காணல் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சங்க புதிய தலைவராக கமலநாதன், செயலாளராக பராங்குசம், பொருளாளராக ராமகிருஷ்ணன், துணைத் தலைவராக ரமேஷ், இணை செயலாளர்களாக கஜபதி, ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டனர்.