ADDED : ஜூன் 30, 2024 04:58 AM
கிள்ளை : கிள்ளை பேரூராட்சி் மன்ற கூட்டம் நடந்தது.
சேர்மன் மல்லிகா தலைமை தாங்கினார். துணை சேர்மன் கிள்ளை ரவிந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடங்களை, பேரூராட்சி அங்கீகாரம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இது, சட்ட விதிக்கு புறம்பானது. மனைப்பிரிவு இடங்களை நகர் ஊரமைப்பு துறையிடம் அனுமதி பெற்று கிள்ளை பேரூராட்சியில் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே, விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், செயல் அலுவலர் மருதுபாண்டியன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
தலைமை எழுத்தர் செல்வராஜூ நன்றி கூறினார்.