Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மின் கட்டண உயர்வை திரும்ப பெற மா.கம்யூ., கோரிக்கை

மின் கட்டண உயர்வை திரும்ப பெற மா.கம்யூ., கோரிக்கை

மின் கட்டண உயர்வை திரும்ப பெற மா.கம்யூ., கோரிக்கை

மின் கட்டண உயர்வை திரும்ப பெற மா.கம்யூ., கோரிக்கை

ADDED : ஜூலை 18, 2024 11:13 PM


Google News
கடலுார்: மின் கட்டணம் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என கடலுார் மா.கம்யூ., கோரிக்கை வைத்துள்ளது.

கடலுார் மாவட்ட மா.கம்யூ., நிர்வாகிகள் கூட்டம், சூரப்பநாயக்கன்சாவடி கட்சிஅலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மாதவன், நிர்வாகிகள் உதயகுமார், ராமச்சந்திரன், தேன்மொழி, மாநகர செயலாளர் அமர்நாத், நெய்வேலி பாலமுருகன், பண்ருட்டி ஏழுமலை, விருத்தாசலம் கலைச்செல்வம், திட்டக்குடி அன்பழகன், பரங்கிப்பேட்டை விஜி, குறிஞ்சிப்பாடி தண்டபாணி, பழனிவேல், காளி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ஏழை மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும்.கடலூர் மாவட்டத்தில் தொடரும் கொலைகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் கொலை, கொள்ளை, வழிப்பறி,ஆன்லைன் நிதி மோசடி போன்ற சட்டம் ஒழுங்கு குற்ற நடவடிக்கைகளை அரசு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us