/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 30, 2024 05:25 AM

கடலுார்: தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் சார்பில் கடலுார் சுகாதாரத் துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் நரசிம்மன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் செல்வகுமார், நிர்வாகிகள் முரளிதரன், விமல்ராஜா, மணிமாறன், சிவசுப்ரமணியன், கனிமொழி முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் நல்லதம்பி, மாநிலத் தலைவர் சுந்தர்ராஜா, முன்னாள் மாவட்டத் தலைவர் குணசேகரன், தலைவர் தனசேகரன், செயலாளர் சதீஷ், புஷ்பபாலன் கண்டன உரையாற்றினர்.
தினக்கூலி அடிப்படையில் முறையாக பணி நியமனம் செய்யப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மணி நன்றி கூறினார்.