Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அமைச்சர் உதவி

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அமைச்சர் உதவி

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அமைச்சர் உதவி

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அமைச்சர் உதவி

ADDED : ஜூலை 15, 2024 11:47 PM


Google News
Latest Tamil News
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து, அமைச்சர் கணேசன் ஆறுதல் கூறினார்.

விருத்தாசலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், கோமங்கலம் அருகே நேற்று முன்தினம் இரவு நடந்த சாலை விபத்தில் கீரம்பூர் சங்குபாலன் மகன் பிரதீப்ராஜா, 22, மணிமாறன், 18, ஆகியோர் சாலை விபத்தில் இறந்தனர். அப்போது, மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த நபர்கள் மீது அவ்வழியே சென்ற கார் மோதியதில் 17 பேர் காயமடைந்தனர்.

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை, அமைச்சர் கணேசன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், விபத்தில் இறந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினார்.

அப்போது, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சாதனம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தேவைகள் குறித்து முதன்மை குடிமையியல் மருத்துவர் சாமிநாதன் கோரிக்கை விடுத்தார்.

ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., இணை இயக்குனர் ரவிக்குமார் ஹரிஹரன், நகர்மன்ற சேர்மன் சங்கவி முருகதாஸ், துணை சேர்மன் ராணி தண்டபாணி உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us