/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கொள்ளுமேடு கிராமத்தில் மருத்துவ முகாம் கொள்ளுமேடு கிராமத்தில் மருத்துவ முகாம்
கொள்ளுமேடு கிராமத்தில் மருத்துவ முகாம்
கொள்ளுமேடு கிராமத்தில் மருத்துவ முகாம்
கொள்ளுமேடு கிராமத்தில் மருத்துவ முகாம்
ADDED : ஜூன் 11, 2024 06:08 AM
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில், அல் அமான் கல்வி அறக்கட்டளை, புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
அமானுல்லா தலைமை தாங்கினார். வீராணந்தபுரம் மருத்துவ அலுவலர் தங்கதுரை துவக்கி வைத்தார். சமூக நல செயற்பாட்டாளர் ராயநல்லுார் ரவி பிரகாஷ், அல் அமான் நர்சரி பள்ளி நிர்வாகி உவைஸ், பிம்ஸ் மருத்துவமனை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
பிம்ஸ் டாக்டர் குமரவேல் தலைமையில் மருத்துவ நிபுணர்கள், ஊழியர்கள் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர்.
முகமது ஷில்பான் நன்றி கூறினார்.