/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மத்திய பிரதேச முதல்வர் சிதம்பரம் கோவிலில் தரிசனம் மத்திய பிரதேச முதல்வர் சிதம்பரம் கோவிலில் தரிசனம்
மத்திய பிரதேச முதல்வர் சிதம்பரம் கோவிலில் தரிசனம்
மத்திய பிரதேச முதல்வர் சிதம்பரம் கோவிலில் தரிசனம்
மத்திய பிரதேச முதல்வர் சிதம்பரம் கோவிலில் தரிசனம்
ADDED : ஜூன் 01, 2024 09:00 PM

சிதம்பரம்,:சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் குடும்பத்துடன் நேற்று வந்தார். அவரை, கீழ சன்னிதியில் பொது தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளை, முதல்வர் மோகன் யாதவ் தரிசனம் செய்தார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள், தாயார் சன்னிதியில் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்தபின், ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றார்.
மத்திய பிரதேச முதல்வர் வருகையையொட்டி, ஏ.டி.எஸ்.பி., அசோக்குமார், ஏ.எஸ்.பி., ரகுபதி தலைமையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.