காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்
காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்
காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்
ADDED : ஜூலை 11, 2024 04:29 AM
விருத்தாசலம், : விருத்தாசலம் போலீசில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.
விருத்தாசலம் நாச்சியார்பேட்டையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் ரஞ்சித்குமார், 21. இவரும் அதே பகுதியை சேர்ந்த சங்கர் மகள் சுபாஷினி, 19. இருவரும் காதலித்து வந்தனர். திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன்காரணமாக, இருவரும் டி.கோபுராபுரத்தில் உள்ள ஆதிசக்தீஸ்வரர் கோவிலில் நேற்று திருமணம் செய்து கொண்டனர்.
அதன்பின், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென விருத்தாசலம் போலீசில் இருவரும் தஞ்சமடைந்தனர்.
அதன்பேரில், இருவரது பெற்றோர்களையும், போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.