/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பள்ளிகளில் பூட்டியே கிடக்கும் ஆய்வு கூடங்கள்; கண்டும் காணாமல் கல்வித்துறை பள்ளிகளில் பூட்டியே கிடக்கும் ஆய்வு கூடங்கள்; கண்டும் காணாமல் கல்வித்துறை
பள்ளிகளில் பூட்டியே கிடக்கும் ஆய்வு கூடங்கள்; கண்டும் காணாமல் கல்வித்துறை
பள்ளிகளில் பூட்டியே கிடக்கும் ஆய்வு கூடங்கள்; கண்டும் காணாமல் கல்வித்துறை
பள்ளிகளில் பூட்டியே கிடக்கும் ஆய்வு கூடங்கள்; கண்டும் காணாமல் கல்வித்துறை
ADDED : ஜூன் 19, 2024 01:22 AM
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களின் செய்முறை திறனை அதிகரிக்க வேதியியல், இயற்பியல் செய்முறை வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆய்வ பயன்பாட்டிற்காக பள்ளிகளுக்கு அரசு பல லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கி வருகிறது.
ஆனால் பல அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு செய்முறை வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. ரெக்கார்டு நோட் மட்டும் எழுதினால் போதும் என்ற நிலை உள்ளது.
பள்ளிகளில் உள்ள வேதியியல், இயற்பியல் ஆய்வகங்கள் அனைத்தும் பூட்டிய நிலையிலேயே உள்ளது. பல பள்ளிகளில் மீட்டிங் நடத்தும் இடமாகவும், வகுப்பறையாகவும் ஆய்வகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு பள்ளிகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள செல்லும் கல்வித்துறை அதிகாரிகள், இதை கண்டும் காணாமல் உள்ளனர். பள்ளிகளில் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்வதில்லை.
இதனால் மாணவர்கள் பள்ளியில் செய்முறை பயிற்சி செய்யாததால், பிராக்டிக்கல் திறன் இல்லாமல் மேல்படிப்புக்கு செல்லும் அவல நிலை உள்ளது.
பள்ளி படிப்பு முடித்து கல்லுாரி செல்லும் மாணவர்கள் கல்லுாரிகளில் உள்ள வேதியியல், இயற்பியல் ஆய்வுகங்களில் உள்ள உபகரணங்களின் பெயர்கள்கூட தெரியாமல் விழிக்கின்றனர்.
எனவே, கல்வித்துறை அதிகாரிகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு செய்முறை வகுப்புகள் தவறாமல் நடத்தவும், அரசு பள்ளிகளில் செயல்படாமல் உள்ள ஆய்வகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.