ADDED : ஜூலை 04, 2024 10:09 PM
திட்டக்குடி : சட்டப்பெயர்களில் இந்தி திணிப்பை எதிர்த்து திட்டக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திட்டக்குடி தபால் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்டக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் கொளஞ்சிநாதன் தலைமை தாங்கினார்.
முப்பெரும் குற்றவியல் சட்ட திருத்தங்களை ஏற்க மறுத்தும், சட்டப்பெயர்களில் இந்தி திணிப்பை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வழக்கறிஞர்கள் பிரகாஷ், காமராசு, சோமசுந்தரம், செந்தில்சரவணன், கார்த்திகேயன், எழிலரசன், முருகானந்தம், பெரியசாமி, மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.