Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அன்னதானம்பேட்டை கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

அன்னதானம்பேட்டை கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

அன்னதானம்பேட்டை கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

அன்னதானம்பேட்டை கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

ADDED : ஜூன் 01, 2024 04:16 AM


Google News
கடலுார், : குறிஞ்சிப்பாடி பச்சை வாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை 2ம் தேதி நடக்கிறது.

குறிஞ்சிப்பாடி அடுத்த அன்னதானம்பேட்டை பச்சை வாழியம்மன், சதுர்புஜ துர்கை, ஜெயகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை 2ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று (1ம் தேதி) காலை 10:30 மணிக்கு கரிக்கோலம், மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம், துர்கா ேஹாமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், தீர்த்த சங்ரஹணம், யாக சாலை பிரவேசம், 9:00 மணிக்கு முதல் கால மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது.

நாளை 2ம் தேதி காலை 5:30 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவஜனம், வேதிகா பூஜை, தத்வார்ச்னை, நாடி சந்தானம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை, 7:30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடகி, 8:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us