ADDED : ஜூலை 03, 2024 05:59 AM
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர், மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர், விலங்கல்பட்டு வள்ளி தேவசனோ சிவசுப்பரமணியர் ஆகிய கோவில்களில் நேற்று கிருத்திகை பூஜை நடந்தது.
பூஜையை முன்னிட்டு நேற்று மதியம் விநாயகர்,வள்ளி தேவசேனா சிவசுப்பரமணியர் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.