/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கீழ தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா துவங்கியது கீழ தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா துவங்கியது
கீழ தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா துவங்கியது
கீழ தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா துவங்கியது
கீழ தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா துவங்கியது
ADDED : ஜூலை 20, 2024 05:26 AM
சிதம்பரம்: சிதம்பரம் கீழ தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள கீழ தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கொடி ஏற்ற நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் காப்புக் கட்டிக் கொண்டனர். தொடர்ந்து உற்சவ திருவிழா நடைபெறுகிறது.
தினசரி இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது. வரும் 23ம் தேதி இரவு தெருவடைச்சான் வீதியுலா நடக்கிறது. 28ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. 29ம் தேதி தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடக்கிறது. இதையொட்டி, அன்று காலை 5:00 மணி முதல் அங்க பிரதட்சணம், அலகு போடுதல், பால்காவடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் சோதனை கரகம், அலகு தரிசனம் நடக்கிறது. பகல் 1:00 மணிக்கு மேல் 2:00 மணிக்கு அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு தீமிதி உற்சவம், இரவு 9:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது.
வரும் 30ம் தேதி இரவு விடையாற்றி உற்சவம், 31ம் தேதி மாலை மஞ்சள் நீர் விளையாட்டு, இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், காத்தவராய சுவாமி கதை, பட்டாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு தலைவர் மற்றும் கோவில் அறங்காவலர் மற்றும் ஸ்தானிகர் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.