குறிஞ்சிப்பாடியில் ஜமாபந்தி நிறைவு
குறிஞ்சிப்பாடியில் ஜமாபந்தி நிறைவு
குறிஞ்சிப்பாடியில் ஜமாபந்தி நிறைவு
ADDED : ஜூன் 20, 2024 08:56 PM
வடலுார் : குறிஞ்சிப்பாடி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று நடந்தது.
கடலூர் டி.ஆர்.ஒ., ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி குறு வட்டத்திற்குட்பட்ட அகரம் கிழக்கு, குண்டியமல்லூர், ஆயிக்குப்பம், தீர்த்தனகிரி, மதனகோபாலபுரம், கோரணப்பட்டு, புலியூர் ஆகிய கிராமங்களில் இருந்தும், விடுபட்ட கிராமங்களில் இருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை உட்பட 477 மனுக்கள் பெறப்பட்டது.
கடந்த 12ம் தேதி தொடங்கி 6 நாட்கள் நடந்துவந்த முகாம் நேற்று நிறைவு பெற்றது.
தாசில்தார் அசோகன், மண்டல துணை தாசில்தார் துரைராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.