Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ உர விற்பனையில் முறைகேடா? தகவல் தெரிவிக்க அறிவிப்பு

உர விற்பனையில் முறைகேடா? தகவல் தெரிவிக்க அறிவிப்பு

உர விற்பனையில் முறைகேடா? தகவல் தெரிவிக்க அறிவிப்பு

உர விற்பனையில் முறைகேடா? தகவல் தெரிவிக்க அறிவிப்பு

ADDED : ஜூன் 09, 2024 02:25 AM


Google News
சேத்தியாத்தோப்பு : ரப்பாளையம் வட்டார விவசாயிகள, குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்களை கூட்டுறவு கடன் சங்கங்கள், அங்கீகரிக்கப்பட்ட உர விற்பனை நிலையங்களில் பெற்றுகொள்ளலாம் என, வேளாண் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வேளாண உதவி இயக்குனர் அமிர்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புவனகிரி அருகே கீரப்பாளையம் வட்டாரத்தில், 2500 ஹெக்டர் அளவில் தற்போது குறுவை சாகுபடி பணிகள் நடந்து வருகிறது.

சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதுமான அளவில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தேவையான உரங்களை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி தங்களது ஆதார் எண்ணை வழங்கி பெற்றுக் கொள்ளலாம்.

கிராமங்களுக்கே நேரடியாக வந்து ஒருசில தனி நபர்கள் மூலம் விற்கப்படும் உரங்களை நம்பி வாங்க வேண்டாம்.

மேலும், உர விற்பனையில் ஏதேனும் முறைகேடு நடந்தால், சி.சாத்தமங்கலத்தில் உள்ள உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு, 96775 44298 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us