/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சர்வதேச யோகா தினம்: கலெக்டர் பங்கேற்பு சர்வதேச யோகா தினம்: கலெக்டர் பங்கேற்பு
சர்வதேச யோகா தினம்: கலெக்டர் பங்கேற்பு
சர்வதேச யோகா தினம்: கலெக்டர் பங்கேற்பு
சர்வதேச யோகா தினம்: கலெக்டர் பங்கேற்பு
ADDED : ஜூன் 24, 2024 06:19 AM

கடலுார், : கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடந்தது.
கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்துகொண்டு யோகா செய்து துவக்கி வைத்தார். இதில் நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதேபோன்று, மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லுாரிகளில் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் யோகா செய்தனர்.
இதில், அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கேற்று யோகா செய்தனர்.
விழாவில், இப்பள்ளியின் யோகா ஆசிரியர்கள் புஷ்பா, விஜயபாலு பங்கேற்றனர். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.