Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மக்கள் வளர்ச்சியில் காவல்துறை திட்டம் துவக்கம்

மக்கள் வளர்ச்சியில் காவல்துறை திட்டம் துவக்கம்

மக்கள் வளர்ச்சியில் காவல்துறை திட்டம் துவக்கம்

மக்கள் வளர்ச்சியில் காவல்துறை திட்டம் துவக்கம்

ADDED : ஜூலை 03, 2024 06:11 AM


Google News
Latest Tamil News
நெய்வேலி : நெய்வேலி அடுத்துள்ள ஆயிப்பேட்டை கிராமத்தில் 'மக்கள் வளர்ச்சியில் மாவட்ட காவல்துறை' எனும் புதிய திட்டத்தை, எஸ்.பி.,ராஜாராம் துவக்கி வைத்தார்.

நெய்வேலி போலீஸ் உட்கோட்டத்திற்குட்பட்ட 7 போலீஸ் நிலையங்களிலும், மக்கள் வளர்ச்சியில் மாவட்ட காவல்துறை எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தில், நெய்வேலி அடுத்துள்ள ஆயிப்பேட்டை கிராமத்தை போதை இல்லாதகிராமமாக உருவாக்கும் நிகழ்ச்சி துவங்கியது.

இத்திட்டத்தில், வரும் 10 ம் தேதி வரை போலீசார் கிராம மக்களுடன் இணைந்து மக்களின் விபரங்கள் சேகரித்தல், துாய்மை பணி, பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி, மக்கள் குறை கேட்பு, மருத்துவ முகாம், விளையாட்டு போட்டிகள், சாலை விபத்து மற்றும் தற்கொலை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கல்வித்திறன், வேலைவாய்ப்பு திறன் குறித்து விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திட்டம் துவக்க நிகழ்ச்சியில் டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் இளவரசி வரவேற்றார். நெய்வேலி டி.எஸ்.பி., சபியுல்லா முன்னிலை வகித்தார்.

திட்டத்தை துவக்கி வைத்து எஸ்.பி.,ராஜாராம் பேசுகையில், ஆயிப்பேட்டை கிராமத்தை குற்றம் நிகழாத கிராமமாகவும், போதை இல்லாத கிராமமாக உருவாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.

ஏசியா பெசிபிக் ரிஜினல் டைரக்டர் பக்தரட்சகன், டாக்டர் அருண் காந்தி, கீழூர் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி காசிநாதன், துணைத் தலைவர் மோகன், முன்னாள் ஊராட்சி தலைவர் ஆறுமுகம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

இதுபோல், நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தின் சார்பில் நெய்வேலி அடுத்துள்ள மேலக்குப்பம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் தெர்மல் இன்ஸ்பெக்டர்செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us