Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வடலுார் வள்ளலார் சபையில் அறங்காவலர்கள் பதவியேற்பு

வடலுார் வள்ளலார் சபையில் அறங்காவலர்கள் பதவியேற்பு

வடலுார் வள்ளலார் சபையில் அறங்காவலர்கள் பதவியேற்பு

வடலுார் வள்ளலார் சபையில் அறங்காவலர்கள் பதவியேற்பு

ADDED : ஜூன் 20, 2024 04:19 AM


Google News
Latest Tamil News
வடலுார் : வடலுார் வள்ளலார் தெய்வ நிலையத்தில், மரபு வழிசாரா அறங்காவலர்கள் நேற்று பதவியேற்றனர்.

வடலுார் வள்ளலார் தெய்வ நிலையத்தின் மரபு வழிசாரா அறங்காவலர்களாக சேராக்குப்பம் கனகலட்சுமி, பார்வதிபுரம், கோட்டக்ரை கனகசபை, அம்பலவாணன்பேட்டை ஸ்ரீராமுலு, பார்வதிபுரம் அழகானந்தன், கருங்குழி கிஷோர்குமார் ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டனர். இந்து அறநிலையத்துறை ஆணையரால் கடந்த 15ம் தேதி இவர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் 5 பேரும் நேற்று காலை வள்ளலார் தெய்வ நிலையத்தில, அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் முன்னிலையில் பதவியேற்றனர். இவர்களில், அழகானந்தம் அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செயல் அலுவலர் ராஜா சரவணகுமார், குறிஞ்சிப்பாடி தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிவக்குமார், வடலூர் நகராட்சி சேர்மன் சிவக்குமார், வடலுார் தி.மு.க .நகர செயலாளர் தமிழ்செல்வன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

சென்னை ஐகோர்ட், அறங்காவலர் குழு அமைக்க வேண்டும் என, இந்து அறநிலைத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us