/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ த நியூ ஜான்டூயி பள்ளியில் மாணவ தலைமை பதவியேற்பு த நியூ ஜான்டூயி பள்ளியில் மாணவ தலைமை பதவியேற்பு
த நியூ ஜான்டூயி பள்ளியில் மாணவ தலைமை பதவியேற்பு
த நியூ ஜான்டூயி பள்ளியில் மாணவ தலைமை பதவியேற்பு
த நியூ ஜான்டூயி பள்ளியில் மாணவ தலைமை பதவியேற்பு
ADDED : ஜூலை 09, 2024 05:45 AM

பண்ருட்டி, : பண்ருட்டி த நியூ ஜான்டூயி மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் மாணவர் தலைமை பதவியேற்பு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். முதல்வர் வாலண்டினாலெஸ்லி வரவேற்றார்.
சப் இன்ஸ்பெக்டர் சுந்தரி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் பதவியேற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கினர். இணைச்செயலர் நிதின்ஜோஸ்வா, முதல்வர் உமாசம்பத், தலைமைஆசிரியர் பாலு கலந்து கொண்டனர்.