/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'கேள்வி கேட்டா மாற்றி விடுவோம்': பெண் சேர்மனுக்கு நெருக்கடி 'கேள்வி கேட்டா மாற்றி விடுவோம்': பெண் சேர்மனுக்கு நெருக்கடி
'கேள்வி கேட்டா மாற்றி விடுவோம்': பெண் சேர்மனுக்கு நெருக்கடி
'கேள்வி கேட்டா மாற்றி விடுவோம்': பெண் சேர்மனுக்கு நெருக்கடி
'கேள்வி கேட்டா மாற்றி விடுவோம்': பெண் சேர்மனுக்கு நெருக்கடி
ADDED : ஜூலை 30, 2024 11:31 PM
கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடி நகராட்சிக்கு, உடன் பிறப்பு கட்சியை சேர்ந்த பெண் சேர்மனாக உள்ளார். இவருக்கும், துணை சேர்மனாக உள்ளவருக்கும் ஆரம்பம் முதலே ஏழாம் பொருத்தம். அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பதில் இருவருக்குமே கடும் போட்டி நடக்கிறது.
சமீபத்தில், நகராட்சியில் முக்கிய ஒப்பந்த பணி தொடர்பாக இருவருக்கும் இடையே அதிகார போட்டி ஏற்பட்டது. இந்த விஷயத்தில் பெண் சேர்மன் வளைந்து கொடுக்காமல் கெடுபிடி காட்டினார்.
இதனால் கடுப்பான துணை சேர்மன் உள்ளிட்ட சிலர், இவ்விவகாரத்தை, அந்த மாவட்ட முக்கிய உடன் பிறப்பு கட்சி நிர்வாகியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதையடுத்து, சேர்மனை தொடர்பு கொண்ட முக்கிய நிர்வாகி, 'கையெழுத்துப்போட மட்டும் தான் நீ, கேள்வி கேட்டால் அந்த இடத்திற்கு வேறு ஒருவர் வரவேண்டி இருக்கும்' என, மிரட்டும் தோணியில் பேசி அனுப்பியுள்ளார்.
இதனால், சேர்மன் என்ற பதவி மட்டும் இருக்கு, ஆனால் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லையே என்ற மன வருத்தில் சேர்மன் இருந்து வருகிறார். இந்த நகராட்சியில் அதிகார போட்டி, நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட முறையாக நடத்தப்படவில்லை என, கவுன்சிலர்கள் புலம்புகின்றனர்.