/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நடுவீரப்பட்டு கெடிலம் ஆற்றில் உயர்மட்ட பாலம் பணி 'ஜரூர்' நடுவீரப்பட்டு கெடிலம் ஆற்றில் உயர்மட்ட பாலம் பணி 'ஜரூர்'
நடுவீரப்பட்டு கெடிலம் ஆற்றில் உயர்மட்ட பாலம் பணி 'ஜரூர்'
நடுவீரப்பட்டு கெடிலம் ஆற்றில் உயர்மட்ட பாலம் பணி 'ஜரூர்'
நடுவீரப்பட்டு கெடிலம் ஆற்றில் உயர்மட்ட பாலம் பணி 'ஜரூர்'
ADDED : ஜூன் 04, 2024 05:57 AM

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு-பாலுார் இடையே, கெடிலம் ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் துவங்கியது.
நடுவீரப்பட்டிலிருந்து பாலுார் செல்லும் சாலையில் உள்ள கெடிலம் ஆற்றில் இருந்த உயர்மட்ட பாலம் பழுதடைந்து, பலவீனமாகியது. இதனால் மழை காலத்தில் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வந்தனர். இந்த பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் அதிகளவு சென்று வருவதால், புதிய பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.19 கோடியே 62 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணிகள் துவங்கியது.
தற்போது புதிய பாலத்திற்கு பைல் பவுண்டேஷன் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.