/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி
தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி
தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி
தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி
ADDED : ஜூலை 15, 2024 11:53 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த ஆயிப்பேட்டையில் குடிசை வீடுகள் தீப்பிடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு புவனகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் ஆறுதல் கூறி நிவாண உதவிகள் வழங்கினார்.
கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆயிப்பேட்டை மெயின்ரோட்டை சேர்ந்தவர்கள் ஆனந்தாயி, 60; ஞானசேகரன், 40; இவர்களது குடிசை வீடுகள் நேற்று முன்தினம் தீப்பிடித்து எரிந்து, பொருட்கள் அனைத்தும் சேதமானது.
தகவலறிந்த புவனகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அரிசி, புடவை, வேட்டி, பணம் உள்ளிட்ட நிவாண உதவிகளை வழங்கினார்.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், ஒன்றிய செயலாளர் கருப்பன், செல்வம், சிவஞானம் உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.