ADDED : ஜூன் 09, 2024 03:55 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத்தின் விருத்தாசலம் வட்ட செயலாளர் சாமிதுரை தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் ரவீந்திரன், மா. கம்யூ., வட்ட செயலர் கலைச்செல்வன், வட்ட தலைவர் ராஜேந்திரன் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
நிர்வாகிகள் விமலா, வேப்பூர் வட்ட தலைவர் கருப்பையா, செயலாளர் சக்தி, வட்ட துணைத் தலைவர் அண்ணாதுரை, துணை செயலாளர் ஆண்டாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விருத்தாசலம் பகுதியில் 45 மாற்றுத் திறனாளிகளுக்கு மனைப்பட்டா வழங்காத விருத்தாசலம் தாசில்தாரை கண்டித்தும், நல்லுார் ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்காமல் இழுத்தடிக்கும் நல்லுார் பி.டி.ஓ., வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் செல்வமணி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதையடுத்து, கோரிக்கை மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.