ADDED : ஜூன் 24, 2024 05:43 AM
பெண்ணாடம், : பெண்ணாடம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் புகையிலை பொருட்கள் தடுப்பு குறித்து, அப்பகுதியில் உள்ள பெட்டி கடை, மளிகைக்கடைகளில் சோதனை செய்தனர்.
க.தொழூரில் ரவிச்சந்திரன், 42, என்பவர் மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், போதை பாக்குகள் விற்பது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்து, ரவிச்சந்திரனை கைது செய்தனர்.