Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவர்களுக்கு பரிசளிப்பு

மாணவர்களுக்கு பரிசளிப்பு

மாணவர்களுக்கு பரிசளிப்பு

மாணவர்களுக்கு பரிசளிப்பு

ADDED : ஜூலை 02, 2024 05:24 AM


Google News
Latest Tamil News
பண்ருட்டி: பண்ருட்டி வன்னியர் குல ஷத்திரியர் அறக்கட்டளை வளர்ச்சி குழு சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

வி.கே.மார்ட் மேலாளர் சதாசிவம் தலைமை தாங்கினார். பழனி வரவேற்றார். லோகநாதன், ஒருங்கிணைப்பாளர்கள் அரிகிருஷ்ணன், விஸ்வநாதன்,ஆறுமுகம், சுந்தர்ராஜன், வக்கீல் குமரன், மோகனகிருஷ்ணன், வி.கே.மார்ட் மாநில ஒருங்கிணைப்பாளர் நீலமேகம், வி.கே.பவுண்டேஷன்தலைவர் மலர்வாசகம், தமிழ்நாடு முந்திரி சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், அணைக்கரை கந்தவேல் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் அரசு செயலாளர் தனவேல், ஒய்வுபெற்ற அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் சிறப்புரையாற்றி 150 மாணவ,மாணவியர்களுக்கு பரிசு, சான்றிதழ், கேடயம் வழங்கினர்.

இதில் டாக்டர்கள் கவுரிசங்கர், ராஜா, கவுன்சிலர்கள் சோழன், கிருஷ்ணராஜ், அர்ச்சனா லாட்ஜ் உரிமையாளர் வீரப்பன், கார்த்திகா சிஎன்சி முருகன், ஆடிட்டர் உதயகுமார், ஒய்வுபெற்ற துணை கலெக்டர் ராஜவேல்,ரோட்டரி முன்னாள் கவுன்சிலர்கள் பாலு, ஐயப்பன், நெய்வேலி குறளமுதன், விருத்தாசலம் சரவணன், ரோட்டரி சங்க உதவி கவர்னர் ரவிசேகர், வீரப்பன் சாத்திப்பட்டு சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us