ADDED : ஜூலை 23, 2024 11:17 PM

பரங்கிப்பேட்டை, : பரங்கிப்பேட்டையில் அரிமா சங்கம் சார்பில், மாவட்ட ஆளுநரின் வாரம் ஒருமுறை தொடர் அன்னதானம் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
பரங்கிப்பேட்டை அரிமா சங்க தலைவர், பு.முட்லுார் அட்சயாமந்திர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் புருஷோத்தமன், செயலாளர் அருள்முருகன் ஆகியோர் பொதுமக்களுக்கு உணவு வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் ராதாகிருஷ்ணன், கவுஸ் ஹமீது, மனோகரன், பொருளாளர் கவுதமன் உட்பட பலர் பங்கேற்றனர்.