/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வரத்து குறைவால் கடலுாரில் மீன்களின் விலை உச்சம் வரத்து குறைவால் கடலுாரில் மீன்களின் விலை உச்சம்
வரத்து குறைவால் கடலுாரில் மீன்களின் விலை உச்சம்
வரத்து குறைவால் கடலுாரில் மீன்களின் விலை உச்சம்
வரத்து குறைவால் கடலுாரில் மீன்களின் விலை உச்சம்
ADDED : ஜூன் 16, 2024 10:47 PM
கடலுார் : கடலுார் மீன்பிடி துறைமுகத்திற்கு மீன்கள் வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை அதிகளவு இருந்ததாலும் விருவிருப்பாக விற்பனையானது.
கடலுார் மாவட்டத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மீனவர்கள் விசைப்படகு மூலம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கடலுார் பகுதி மீனவர்கள் பைபர் படகு மற்றும் நாட்டு படகு மூலம் மீன் பிடித்து வந்தனர். நேற்று கடலுார் மீன்பிடி துறைமுகத்திற்கு மீன்கள் வரத்து குறைந்த காணப்பட்டன. கடலில் நீரோட்டம் மாறுபாடு காரணமாக மீன்கள் பாடு குறைந்தும், சிறிய மீன்கள் அதிக அளவில் கிடைக்கிறது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். சாம்பாரை, சென்னா ஓரை, சங்கரா, சீலா, ஊலா, வெள்ள கிலங்கம் போன்ற மீன் வகைகள் தான் அதிக கிடைத்துள்ளன.
நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால், கடலுார் மீன்பிடி துறைமுகத்தில், மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டதால், மீன்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1,300க்கு விற்கப்பட்டன. சங்கரா ரூ.580, சீலா, வெள்ள சிலங்கம் வகை மீன்கள் ரூ.400, ஊலா ரூ.200, சாம்பாரை, சென்னா ஓரை மீன்கள் கிலோ ரூ.150 முதல் ரூ.200க்கு விற்கப்பட்டன.