/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பேச்சுப்போட்டியில் முதலிடம்; மாணவிக்கு கலெக்டர் பாராட்டு பேச்சுப்போட்டியில் முதலிடம்; மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
பேச்சுப்போட்டியில் முதலிடம்; மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
பேச்சுப்போட்டியில் முதலிடம்; மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
பேச்சுப்போட்டியில் முதலிடம்; மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
ADDED : ஜூலை 31, 2024 04:20 AM

கடலுார் : தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடந்த மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை கலெக்டர் பாராட்டினார்.
கவிஞர் தமிழ் ஒளி மற்றும் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.
இதில், சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி ஷன்மதி, முதலிடம் பிடித்து, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கேடயம் பரிசாக பெற்றார்.
கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார், பரிசு பெற்ற மாணவியை பாராட்டி வாழ்த்தினார்.