ADDED : ஜூன் 04, 2024 05:04 AM

சிதம்பரம், : குமராட்சி வர்த்தக சங்கம் சார்பில், மறைந்த முன்னாள் வர்த்தக சங்க கவுரவத் தலைவர் சக்கரவர்த்தி நினைவாக, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
குமராட்சி வர்த்தகர் சங்க தலைவர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ராமலிங்கம், பேராசிரியர் இளஞ்செழியன், இளங்கோவன், பாண்டியன் முன்னிலை வகித்தனர். செயலாளர் மணிவண்ணன் வரவேற்றார். டாக்டர் இளையராஜா துவக்கி வைத்தார்.
ஒருங்கிணைப்பாளர் அப்துல்பாசித், துணைத்தலைவர் பார்த்தசாரதி, துரைசிங்கம், அப்துல்ரவுப், குமரவடிவு, மணிகண்டன், பாலமுருகன், பிரதீப் குட்டிமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 55 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.