ADDED : ஜூன் 01, 2024 06:29 AM

கடலுார், : கடலுார் மாவட்ட காவல் துறை வாகனங்கள் ஓட்டும் போலீசாருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
கடலுார் காவலர் திருமண மண்டபத்தில் நடந்த முகாமை, எஸ்.பி., ராஜாராம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எஸ்.பி.,-டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோருக்கான வாகனங்கள் ஓட்டும் 88 போலீசாருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, கண் குறைபாடுடையவர்களுக்கு கண் கண்ணாடி அணிய பரிந்துரைக்கப்பட்டது.