/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திட்டக்குடி கிராம மக்களுக்கு வெடிகுண்டு குறித்து விழிப்புணர்வு திட்டக்குடி கிராம மக்களுக்கு வெடிகுண்டு குறித்து விழிப்புணர்வு
திட்டக்குடி கிராம மக்களுக்கு வெடிகுண்டு குறித்து விழிப்புணர்வு
திட்டக்குடி கிராம மக்களுக்கு வெடிகுண்டு குறித்து விழிப்புணர்வு
திட்டக்குடி கிராம மக்களுக்கு வெடிகுண்டு குறித்து விழிப்புணர்வு
ADDED : ஜூன் 04, 2024 06:31 AM

திட்டக்குடி : திட்டக்குடி மற்றும் ராமநத்தம் பகுதியில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சிறுமுளை கிராமத்தில் காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட நாட்டுவெடியை கையில் எடுத்து பார்த்த செல்வராசு என்பவரின் விரல்கள் சேதமடைந்தது. ராமநத்தம் அடுத்த ஆலத்துாரில் வெடியை கடித்ததால் வாய் சிதறி பசுமாடு இறந்தது.
இந்த சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். அதையடுத்து, வெடிகுண்டு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கடலுார்எஸ்.பி.,ராஜாராம் உத்தரவிட்டார். அதன்பேரில், கடலுார் மாவட்ட வெடிகுண்டு மற்றும் செயலிழப்பு பிரிவு சப்இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையிலான குழுவினர், மோப்பநாய் லியோவுடன் சிறுமுளை மற்றும் ஆலத்துார் கிராமத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது, கிராமத்தில் சந்தேகப்படும்படியான பொருட்களோ, நபர்களையோ பார்த்தால் போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். வெடிகுண்டு தோற்றத்தில் இருக்கும் பொருட்களை கையில் எடுத்து பார்க்கக்கூடாது, வெடி வைக்கும் நபர்கள் தெரிந்தால் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிறுமுளை கிராமத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன், சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் போலீசார், பொதுமக்கள் பங்கேற்றனர். ராமநத்தம் அடுத்த ஆலத்துார் கிராமத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ராமநத்தம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், கலியமூர்த்தி மற்றும் போலீசார், பொதுமக்கள் பங்கேற்றனர்.