/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விபத்தில் கால் உடைந்ததால் எலக்ட்ரிஷியன் தற்கொலை விபத்தில் கால் உடைந்ததால் எலக்ட்ரிஷியன் தற்கொலை
விபத்தில் கால் உடைந்ததால் எலக்ட்ரிஷியன் தற்கொலை
விபத்தில் கால் உடைந்ததால் எலக்ட்ரிஷியன் தற்கொலை
விபத்தில் கால் உடைந்ததால் எலக்ட்ரிஷியன் தற்கொலை
ADDED : ஜூலை 18, 2024 11:21 PM
நெல்லிக்குப்பம்: விபத்தில் கால் உடைந்ததால், வேலைக்கு செல்ல முடியாத விரக்தியில் எலக்ட்ரிஷியன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டை சேர்ந்தவர் சேகர், 49; எலக்ட்ரிஷியன். இவருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு, ஆபரேஷன் செய்யப்பட்டது. இதனால், வேலைக்கு செல்ல முடியாமல் வருமானமின்றி விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதனால், மன அழுத்தத்தில் இருந்த சேகர் நேற்று காலை மது அருந்திவிட்டு வந்து வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்துகெண்டார்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இவருக்கு, மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.