/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சாலை நடுவே மின்கம்பம் பொதுமக்கள் அவதி சாலை நடுவே மின்கம்பம் பொதுமக்கள் அவதி
சாலை நடுவே மின்கம்பம் பொதுமக்கள் அவதி
சாலை நடுவே மின்கம்பம் பொதுமக்கள் அவதி
சாலை நடுவே மின்கம்பம் பொதுமக்கள் அவதி
ADDED : ஜூன் 11, 2024 06:29 AM

நடுவீரப்பட்டு: பாலுார் அடுத்த சன்னியாசிப்பேட்டையில் சாலையின் நடுவில் மின்கம்பம் உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த பாலுார் அருகே சன்னியாசிப்பேட்டை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி காந்தி நகரில் சிமென்ட் சாலை நடுவே மின்கம்பம் உள்ளது.
சாலையை அளவீடு செய்யாமல் மின்கம்பம் நடப்பட்டதால், சாலை பணி நடக்கும் போது மின்கம்பத்தினை சாலையின் நடுவில் வைத்தே சாலை போட்டனர்.
இதனால் இந்த பகுதியில் வீடு கட்டுபவர்களுக்கு தேவையான கட்டுமான பொருட்கள் எடுத்து செல்வதில் சிக்கல் உள்ளது.
மேலும் மின்கம்பம் நடுவழியில் உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, மின்துறை அதிகாரிகள் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.