/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தேர்தலுக்கு தேர்தல் இன்பச் சுற்றுலா குஷி மூடில் இடைத் தேர்தலுக்கு தயாராகும் உ.பி.,கள் தேர்தலுக்கு தேர்தல் இன்பச் சுற்றுலா குஷி மூடில் இடைத் தேர்தலுக்கு தயாராகும் உ.பி.,கள்
தேர்தலுக்கு தேர்தல் இன்பச் சுற்றுலா குஷி மூடில் இடைத் தேர்தலுக்கு தயாராகும் உ.பி.,கள்
தேர்தலுக்கு தேர்தல் இன்பச் சுற்றுலா குஷி மூடில் இடைத் தேர்தலுக்கு தயாராகும் உ.பி.,கள்
தேர்தலுக்கு தேர்தல் இன்பச் சுற்றுலா குஷி மூடில் இடைத் தேர்தலுக்கு தயாராகும் உ.பி.,கள்
ADDED : ஜூன் 11, 2024 11:25 PM
பண்ருட்டி நகராட்சி, தொரப்பாடி பேரூராட்சி, அண்ணாகிராமம், மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி நகர தி.மு.க., நிர்வாகிகள், கவுன்சிலர்கள் அமைச்சர் கணேசன் ஏற்பாட்டில், ஊட்டி, குற்றாலம், கேரளா மாநிலம் ஆலப்புழா ஆகிய பகுதிகளுக்கு இன்ப சுற்றுலா அழைத்து செல்லப் பட்டனர்.
தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே தி.மு.க., நிர்வாகிகள், கவுன்சிலர்களை அமைச்சர் கணேசன் அறிவுரையின்பேரில் அந்தந்த பகுதி நிர்வாகிகள், கவுன்சிலர்களுக்கு ஒரு லட்சம் என வழங்கப்பட்டு, நிர்வாகிகள், கவுன்சிலர்கள் சிறப்பாக கவனிக்கப்பட்டனர்.
அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தனது குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்றார்.
அண்ணாகிராமம் ஒன்றிய நிர்வாகிகள் சுற்றுலா செல்ல விரும்பியவர்களுக்கு தலா 5000 ரூபாய் என வழங்கி அசத்தினர். தேர்தல் வெற்றிக்கு முன்பே சுற்றுலாவா என்றனர். தேர்தல் முடிந்தவுடன் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் அறிவிப்பு வந்துவிடும் என்பதால் கழகத்தினரை குஷிப்படுத்த இந்த ஏற்பாடாம்.
தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு வந்து, வேட்பாளரும் அறிவிக்கப்பட்டதால் விக்கிரவாண்டி தேர்தலுக்கு பின்பும் இன்ப சுற்றுலா உண்டு என கூறியுள்ளதால் நிர்வாகிகள் சுற்றுலா குஷியில் விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல தயாராகி வருகின்றனர்.