ADDED : ஜூலை 07, 2024 04:07 AM

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் சிதம்பரம் வட்டார ஆத்மநாதர் இளைஞர் அணி சார்பில் 10ம் ஆண்டு கல்வி விழா நடந்தது.
விழாவிற்கு, தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். முத்துராமலிங்கம், ஜெயராமன், கற்பகமூர்த்தி, வீரமணி முன்னிலை வகித்தனர். செயலாளர் ஆத்மலிங்கம் வரவேற்றார்.
2023-2024ம் கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாநில தலைவர் வீரப்பன், செயலாளர் சிவசண்முக சுந்தரம், சம்பத் ஆகியோர் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பட்டயம் வழங்கினர்.
விழாவில், முன்னாள் தலைவர் தியாகராஜன், ராஜேந்திரன், மற்றும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சேத்தியாதோப்பு, ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, வடலுார், நெய்வேலி, மீன்சுருட்டி, கொள்ளிடம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.