கிழக்கு மாவட்ட பா.ம.க., கொடியேற்றம்
கிழக்கு மாவட்ட பா.ம.க., கொடியேற்றம்
கிழக்கு மாவட்ட பா.ம.க., கொடியேற்றம்
ADDED : ஜூலை 17, 2024 12:55 AM

கடலுார் : கடலுார் மஞ்சக்குப்பம், முதுநகர், சேடப்பாளையம், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, வடலுார், நல்லாத்துார், சாவடி உட்பட பல்வேறு இடங்களில் பா.ம.க., ஆண்டு விழாவையொட்டி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, மாநில அமைப்பு தலைவர் தாமரைக்கண்ணன்,மாநில மாணவரணி தலைவர் கோபிநாத், மாநில செயற்குழு உறுப்பினர் போஸ்ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். இதில், கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.அப்போது, மாநில சமூக நீதிப் பேரவை செயலாளர் தமிழரசன், மாநகராட்சி கவுன்சிலர்
சரவணன், மாவட்ட துணை செயலாளர் சிலம்பு, மாவட்ட மாணவரணி செயலாளர் மணி, இளைஞரணி சந்திரசேகர், மகளிரணி திலகவதி, நகர செயலாளர் ஆனந்த், நகரத் தலைவர் ரமேஷ் கண்ணன், ஆறுமுகம், மதி, ராஜா, பூபதி, ரவி, தனசேகர், சரவணன், லதா, ராமச்சந்திரன், தானையி, பாலாஜி, கார்த்தி, அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.