/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிழக்கு மாவட்ட பா.ம.க., செயற்குழுக் கூட்டம் கிழக்கு மாவட்ட பா.ம.க., செயற்குழுக் கூட்டம்
கிழக்கு மாவட்ட பா.ம.க., செயற்குழுக் கூட்டம்
கிழக்கு மாவட்ட பா.ம.க., செயற்குழுக் கூட்டம்
கிழக்கு மாவட்ட பா.ம.க., செயற்குழுக் கூட்டம்
ADDED : ஜூலை 14, 2024 11:25 PM

கடலுார்: கடலுாரில் கிழக்கு மாவட்ட பா.ம.க., செயற்குழுக் கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ஆனந்தராஜா, பிரேம்குமார், பாலு, செல்வசோழன், ஆனந்த் முன்னிலை வகித்தனர். பசுமை தாயகம் மாவட்டத் தலைவர் சரவணன் வரவேற்றார்.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் போஸ் ராமச்சந்திரன், வெங்கடேசன், மாநில மாணவரணித் தலைவர் கோபிநாத், பசுமை தாயகம் மாவட்ட செயலாளர் விநாயகம், துணை செயலாளர் ரமேஷ், இளைஞரணி செயலாளர் சந்திரசேகர், மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் வெங்கடேசன், சிலம்பு, ரவி, சங்கர், ரகுபதி, லதா, தானாயி உட்பட பலர் பங்கேற்றனர்.
பா.ம.க., 36வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நாளை (16ம் தேதி) கடலுார் மாவட்டம் முழுதும் அனைத்து கிராமங்கள், நகரங்களில் கட்சிக் கொடி மற்றும் வன்னியர் சங்க கொடியேற்றுவது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பா.ம.க., விற்கு ஓட்டளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
மாவட்டத்தில் போதைப் பொருட்களின் விற்பனையை தடை செய்ய சிறப்பு காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.