/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெருமாள் ஏரி துார்வாரியதால் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் பெருமாள் ஏரி துார்வாரியதால் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
பெருமாள் ஏரி துார்வாரியதால் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
பெருமாள் ஏரி துார்வாரியதால் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
பெருமாள் ஏரி துார்வாரியதால் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
ADDED : ஜூலை 03, 2024 03:06 AM

குள்ளஞ்சாவடி : பெருமாள் ஏரி துார்வாரியதன் மூலம், நீர்பிடிப்பு பகுதி அதிகரித்துள்ளதால், விவசாயிகள் இருபோக சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலுார் மாவட்டத்தின் முக்கிய நீர் நிலைகளில் ஒன்றாக பெருமாள் ஏரி உள்ளது. இந்த ஏரி துார்ந்ததை தொடர்ந்து, ரூ.112. 42 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறையின் நீர்வளத்துறை சார்பில் துார்வாரப்பட்டது. ஏரியின் இயல்பான கொள்ளளவு, 574 மில்லியன் கன அடி இருந்த நிலையில், துார்வாரப்பட்டதால் 723 மில்லியன் கன அடியாக நீர்பிடிப்பு பகுதி கொள்ளளவு உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது ஏரிக்கு 40 கன அடி தண்ணீர் வரும் நிலையில், ஏரியின் கொள்ளளவு, 355 மில்லியன் கன அடியாக உள்ளது. பெருமாள் ஏரி மூலம், 6503 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஏற்கனவே, ஒரு போக சாகுபடி செய்த நிலையில், தற்போது கொள்ளளவு அதிகரிக்கப்பட்டதால் இரண்டாவது போக சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.